Esoteric Darkness [கறுவழி]




Go back to parent site Esoteric Darkness

கறுவழி செல்ல


Thursday, November 11, 2010

தாமரை - thAmarai

சமீபத்தில் விகடனில் பாடலாசிரியர் தாமரையின் உரையாடல் ஒன்றை படித்தேன். அவர் ஏன் சராசரி "பாராட்டு கவிஞராக" இல்லை என்று விகடனில் கேட்டிருந்தார்கள். பாராட்டு கவிஞர் என்றால், தற்போது அரசியல்வாதிகளுடன் சுமூகமாக இருப்பது; ஒரு கவிதை புத்தகம் எழுதி முதல்வரை வெளியிட சொல்வது - இப்படி!

தாமரை இருப்பது நேர் எதிராக. உதாரணத்திற்கு இலங்கை பிரச்சனைக்கு கருணாநிதி, ஜெயலலிதா, மத்திய அரசு என்று எல்லோரையும் சாடியுள்ளார். எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், எளிய வழியை விட்டு விட்டு இப்படி கடினமான வழியில் பயணிப்பது தினமும் பார்ப்பதில்லை. சினிமாவில் கூட அவர் பாடல்களில் ஆங்கிலம் கலப்பது இல்லை என்று உங்களுக்கு தெரியும் தானே?


அவரை கடைசியாக கேட்ட கேள்வி - "இலங்கை பிரச்சனை தொடர யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?". அவர் பதில்:
1) கருணாநிதி (இதை வைத்து ஒப்பு அரசியல் செய்வதால்)
2) ஜெயலலிதா (சரியான எதிர்கட்சியாக செயல்படாத்தால்)
3) காங்கிரஸ் (இந்திய அரசாக சரியான வகையில் பலத்தை பயன்படுத்தாது செல்வதால்)
4) தமிழக மக்கள் (அந்த பிரச்சனை அறிந்தும் தலையை திருப்பி கொண்டு அன்றாட வாழ்வில் ஈடுபடுவது)

எனக்கு முதல் மூன்றில் பெரிய வியப்பேதும் இல்லை. நம் அரசியல்வாதிகளிடம் எதையும் எதிர்பார்ப்பது புத்திசாலித்தனம் இல்லை. எனக்கு வலிப்பது நான்காவது தான்!

தாமரியின் வீரியத்திற்கு ஒரு வணக்கம்!

0 comments:

 
Web Analytics