Esoteric Darkness [கறுவழி]




Go back to parent site Esoteric Darkness

கறுவழி செல்ல


Monday, August 16, 2010

மறுபடியும் - maRupadiyum

படம் முழுக்க இறுக்கம் தான்! சிலர் வாழ்க்கையும் அப்படித்தான் போலிருக்கிறது. படம் முழுக்க எதையும் விட்டு கொடுக்காமல், ஒரு சில மனிதர்களின் முடிவு எப்படி சுற்றி இருப்பவர்களையும் ஆட்டி வைக்கிறது என்பதை நுண்ணியமாக, அழகாக செதுக்கி இருக்கிறார் பாலு மகேந்திரா!

இன்னொரு அற்புதமான விஷயம். வாழ்வில் எதையெல்லாம் அடித்தளமாக கொண்டு வாழ்ந்திருக்கிறோமோ, அதையெல்லாம் பறித்து விட்டால் கூட கண்ணியம் தவறாமல் வாழ முடியும் என்று காட்டியிருப்பது. அதே கோணத்தில் - கை கொடுக்க ஒருவர் இல்லையென்றால் எப்படி தவறான் பாதையில் சுலபமாக சென்று விட முடிகிறது (விநோதினியின் கதாபாத்திரம்)!

இப்போது சுறா, சிங்கம், கரடி என்று மனிதர்கள் காற்றில் பறப்பதைத்தான் காட்டுகிறார்கள். ஆனால் வாழ்க்கை யதார்த்தமாகத்தானே செல்கிறது! மறுபடியும்...

0 comments:

 
Web Analytics