1) காற்றே காற்றே...
அமைதியான மனதில் - அதாவாது, ஆனந்தமும் இல்லாமல், சலனமும் இல்லாமல் இருக்கும் மனதில் இருந்து உலகை பார்க்கும் பார்வையில் வெளிவரும் பாடல். இந்த மனதிற்கு பார்க்கும் எல்லாமே நில்யில்லாதது என்று புரிகிறது - ஐய்யப்பன் திருவடிகளை தவிர!
2) இருமுடி கட்டுக்குள்ளே...
தன் இதுவரை வாழ்ந்த வாழ்வை ஒரு கலக்கத்துடன் திரும்பிப்பார்க்கிறது ஒரு உயிர். இதுவரை என்றால் - அனைத்து ஜென்மங்களையும் சேர்த்துத்தான். "என் எல்லா ஜென்மங்களின் பாவங்களையும் இருமுடியாய் கட்டி உன் காலடியில் போட்டுவிடுகிறேன்! என்னை கரை சேர்த்துவிடு..." என்று துடிக்கும் உயிரின் குரல்!
3) ஐயப்பன் அழைக்காமல்
ஒரு சபரி யாத்திரை மேற்கொள்ள ஒரு வரம் தேவை. நீங்கள் செய்யும் முயற்சியால் அது நடக்காது. அவன் அழைப்பது, மற்றும் உங்கள் தன்மையின் ஒருங்கிணைப்பாக அது "அமைந்தால்" மட்டுமே நடக்கும். இதை உணர்ந்த நிலையில் இருந்து ஒலிக்கும் ஒரு குரல்.
4) பக்தனின் பாரங்கள்...
இது ஐயப்பன் தன் கூட இருக்கிறான் என்ற ஒரு பக்தனின் கர்வத்தை பிரதிபலிக்கும் ஒரு பாடல். ஒரு ஐயப்பன் பக்தனை சீண்டாமல் அவன் போக்கில் விட்டுவிடு என்று எச்சரிக்கும் பாடல்! கேட்க கொஞ்சம் பயமாகவே இருக்கும்! :)
5) எங்கெங்கும் பூலோகத்தில்...
ஒரு முறை திருவண்ணாமலை கிரிவலம் முடிந்து கோவிலில் இருந்த "சிவ சிவ" என்ற எழுத்துக்களை பார்த்து ராதாவிடம் வியப்பில் சொன்னேன் - "இது எப்படி இவனால் முடிகிறது!" என்று. அந்த வியப்பில் கொஞ்சம் பக்தியும் இருந்தது. சபரி மலை பற்றி, இந்த உணர்வின் உச்சத்தில் ஒலிக்கும் பாடல்! இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன!
"... அன்னத்தின் சாரத்தில் வந்த உடல்
அட என்னத்துக்காகும் இந்த உடல்
உள்ளது இங்கே ஓர் பக்திக்கடல்
அதில் மூழ்கி எழுந்தால் ஞானஉடல்!"
6) உடம்பெல்லாம் ஒரு ரோமாஞ்சனம்...
ஒரு பக்தனுக்கு மணிகண்டனின் எண்ணமே அவனை பரவசத்தில் ஆழ்த்தும் மனநிலையில் தோன்றும் பாடல். இந்த உணர்வுகள் எல்லாம் எப்படி இவரால் பாடலில் கொண்டுவரமுடிகிறது என்று விய்ப்பாக இருக்கிறது!
"... என்வசம் நானில்லை, இங்கு தன்வசம் மனமுமில்லை
நான் உன்வசம் வந்தவுடன், என் பரவசம் அளவிலில்லை!"
7) ஐயப்ப பக்தர்கள் எல்லாம்...
வேற்றுமை இல்லாமல் ஒரு நோக்கத்தில் மலைக்கு வரும் அனைவரும் ஒரு குடும்பமே என்ற ரீதியில் வரும் பாடல். இது ஒரு மனநிலையில் இருந்து மட்டும் வந்திருந்தால் சாதரணமாக போயிருக்கும். ஆனால் இப்படி ஒரு கூட்டமே பக்தியின் உச்சத்தில், ஒரே நோக்கத்தில், ஐய்ப்பனின் திருவடிகளில் கரைந்து போனால்...? கேட்க விய்ப்பாக இருக்கிறது தானே ? இந்த வரிகளை கண்களில் நீர் இல்லாமல் கேட்பது கடினம்!
"... விதியோடு போராடும் யாவருமே
பதினெடு படியேறும் நாள்வருமே
உதிர்கின்ற இலைதானே நம் உடலே
உதிருமுன் சபரியில் சேர்ந்திடவே..."8) ஓம் எனும் பிரனவ...
கர்நாடக பாடல் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதை சரியாக விமர்சிக்க எனக்கு தெரியவில்லை! பாடியவர் ஷங்கரன் நம்பூதிரி.

1 comments:
பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள
ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே
தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே
மாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.
அங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.
குருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.
இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.
குரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட
மலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment