Tuesday, November 18, 2008

வாரணம் ஆயிரம் - vAraNam Ayiram

படத்தை (suspenசோடு) பார்க்க நினைத்தால் விமர்சனத்தை படிக்க வேண்டாம்!

படத்தின் கரு பின்னோக்கி செல்வதாலும், ஒரே நடிகர் பல பாத்திரங்களை செய்வதாலும், மேக்கப் மிகவும் முக்கியமாகி போகிறது. அந்த departmentஇல் வேலை அபாரம். முதலில் படம் தொடங்கி பாரக்கும் மிகவும் வயதான சூர்யா தொடங்கி, நடுவயது, இளைஞன், சிறுவன் என்று அனைத்து பருவங்களும் நெருடாமல் மட்டும் இல்லை, நன்றாகவே இருக்கிறது! சிம்ரன் கூட சில இடங்களில் கிழவி போல தெரிகிறார் (மேக்கப் தானே?)

படம் இள சூர்யாவின்  flashback போல ஆரம்பிக்கிறது. தந்தை மரணம் (சூர்யாதான்!) தெரிந்த நெகிழ்வில் சிந்தனையில் ஆழ்கிறார். நெருடல் இங்கேதான்! நமக்கு மிகவும் பிரியமானவர் மறைந்து போனால் நினைவுகள் அவரை சார்ந்து இருக்கும் - இல்லை அவருடன் இணைந்த அந்த தருணங்கள் சார்ந்து இருக்கும். ஆனால் இவர் தன்னுடைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டு எல்லாவற்றிற்கும் அப்பாவுக்கு ("டாடி"க்கு) நன்றி சொல்கிறார். ஒட்டவில்லை! இதே கதையை திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. உணர்வு சுழர்ச்சிகள் வார்த்தை அளவில் மட்டும் இருப்பது மிகப்பெரிய பலவீனம். இதே மையமாக வைத்து வந்த "தவமாய் தவமிருந்து" படத்தை பார்த்தால் contrast புரியும்.

இது கெளதம், ஹாரிஸ் ஜெயராஜின் கடைசி படம் என்று பார்க்கும் முன் தான் தெரிந்தது. So Sad. It is a loss for both of them! பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஆனால்... தெரியவில்லை. முன் சொன்ன காரணமா, இல்லை வேறு ஏதேனுமா... But, I will miss your combination!

இரண்டு கதாநாயகிகள் - இருவருமே அழகு. திவ்யா மனதில் நிற்கும் அளவுக்கும் சமீரா நிற்க வில்லை. கதையில் கூட கடைசி வரை சூர்யாவுடன் அவர் ஒட்டாமல் இருந்த்தால் இருக்கலாம். அவர்களுடைய முதல் முத்தம் கூட எதிர்பார்த்த பாதிப்பை ஏற்படுத்தாதது ஏமாற்றம் (எனக்கில்லை, கதைக்கு!)

கெளதம் படம் என்றால் இரண்டு தாதா, அடி தடி அரிவாள், கெட்ட வார்த்தை என்பது trend மாதிரி ஆகிவிட்டது. என்ன சார், இந்த மாதிரி படத்துல கூடவா! Context கொஞ்சம் அழுத்தமாக இருந்ததால் பிழைத்தது. ஆனால் "ஒருத்தன் தெருவில இருங்கினா என்ன வேணும்னா செய்யலாம்..." - நச்சென இருக்கிறது!

வாழ்வில் சின்ன சின்ன சுவாரசியங்களை பார்த்து படத்தில் தெளித்திருப்பது அழகாக இருக்கிறது. இன்னும் அதிகம் இருந்திருக்க வேண்டுமோ? All the more reason for a flashback sequence - ஏனேன்றால் அந்த மாதிரி நினைவுகள் தான் பதிந்திருக்கும்.

கடைசியில் எப்படி- வாரணம் ஆயிரம் - நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாது, இல்லைன்னும் சொல்ல முடியாது. இன்னும் நல்லா இருந்திருக்கலாம்! கண்டிப்பாக ஒரு முறையாவது பார்க்கலாம்!

3 comments:

Raji said...

:)
oru murai paarkiren...simran surya rendu perum almost ore vayasu thaane?....why this doubt?

Deepak said...

Raji,
ungaLukku (attempted) joke puriyalainnu n-inaikkiREn :)

Raji said...

puriyuthu....joke puriyaatha maathiri nadithu...friendsai vambukku izhupathu...ennoda style...guess its difficult with you...:))
u attempted and succeeded no worries
:)

 
Web Analytics