Wednesday, September 12, 2007

கனா கண்டேன்...

பார்த்தவுடன், "இந்த படம் ஏன் ஓட வில்லை?" என்ற கேள்விதான் எழுந்தது.

பல அம்சங்கள் மற்ற சராசரி படங்களை விட சிறந்து இருந்தது.

* முதலில், திரைக்கதையை எங்கும் சிக்க விடாமல் கோர்வையாக எடுத்து சென்றிருந்தது
* இடைவெளி வரை கதையின் முடிச்சை அவிழ்க்காமல் யூகிக்க வைத்தது
* நகைச்சுவையிலும் சரி, கதையிலும் சரி - பல அவலங்களை அடிக்கோடிட்டு காட்டி இருப்பது
* பல பாத்திரங்களை புத்திசாலித்தனத்துடன் உருவாக்கி இருப்பது. கதாநாயகி உட்பட (தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே அதிசயம்). இன்னும் புத்திசாலித்தனமான வில்லைனை உருவாக்கி இருப்பது
* பல சராசரி "முடிச்சு"களில் மாட்டிக்கொள்ளாதது. உம் - ஸ்ரீகாந்த், கோபிகா காதலை அரை நிமிடத்தில் போட்டு உடைத்தது

இதை எல்லாம் தாண்டி வித்யாசாகரின் "தாய் சொல்லும்..." பாடல் மனதில் நிற்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக படமாக்கி இருக்கலாம்!

மொத்தத்தில் ஒரு சபாஷ்! இந்த படம் ஓடி இருந்தால் இயக்குநருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருந்திருக்கும்!

No comments:

 
Web Analytics